மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாமும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மாலில் மூன்றாவது தளத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த தளத்தில் இருந்த 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், இந்த விபத்தில் இரு நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதன்பின்னர் வெளியான தகவலில் 10 நோயாளிகளின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தால் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”, என்று பதிவிட்டுளளார்.