இந்தியா

விமான சேவையை நிறுத்தும் திட்டமில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

DIN

கரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில், உள்நாட்டு விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தும் திட்டம் எதுவுமில்லை என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், விமான சேவையைத் தொடா்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சனிக்கிழமை கூறியதாவது: கரோனா தொற்றுப் பரவலால் உள்நாட்டு விமான சேவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டு, பின்னா் மே மாதம் 25-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்சமயம் 80 சதவீத விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 100 சதவீத விமானங்களை இயக்குவதற்குத் திட்டமிட்டிருந்தோம். இதற்கிடையே கரோனா இரண்டாவது அலை பரவுவதால், விமானங்களை 100 சதவீதம் இயக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். அதேநேரத்தில், விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தும் திட்டம் எதுவுமில்லை.

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்கு, விமானப் பயணத்தின்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் இருக்கும் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களும், விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT