இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளி தற்கொலை 

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 81 வயதான மூதாட்டி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

PTI

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 81 வயதான மூதாட்டி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

திங்களன்று மாலை 5.30 மணியளவில் கரோனா வார்டில் உள்ள குளியலறையில் ஆக்ஸிஜன் குழாய் மூலம் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்தவர் புருஷோத்தம் அப்பாஜி கஜ்பியே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தற்கொலை செய்துகொண்டவர் இங்குள்ள ரம்பாக் பகுதியில் வசிப்பவர். கடந்த மார்ச் 26 அன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT