முகப்பு
இந்தியா

கேரளத்தை இடதுசாரி, காங். கூட்டணிகள் இழிவுபடுத்தியுள்ளன: மோடி

இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை கேரளத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை கேரளத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுவரை கேரளத்தை ஆண்டவர்கள் நமது கலாசாரத்தையும், நெறிமுறைகளையும் சீரழித்துள்ளதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது, கேரளத்தில் பக்தர்கள் மீது லத்திக் கலவரத்தை ஏவிய இடது ஜனநாய முன்னணி அதற்காக வெட்கப்பட வேண்டும். அதனை வேடிக்கை பார்த்த காங்கிரஸ் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

இடதுசாரிகள் பலமுறை கேரளத்தை ஆண்டுள்ளனர். தனது போட்டியாளர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது அவர்களது அரசியல். 

கேரளத்திற்கும் சுற்றுலாவிற்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. ஆனால் இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எந்த அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை. வளர்ச்சியின் அடிப்படையாக தொழில்நுட்ப சேவையை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →