முகப்பு
இந்தியா

ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலி

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலியானார்.

Updated On : 1 மே, 2021 at 1:17 PM
ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலி
பகிர்:


புது தில்லி: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலியானார்.

அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக தில்லி சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்டு ஏப்ரல் 20-ஆம் தேதி ஷஹாபுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை மோசமடைந்து 2 நாள்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.