இந்தியா

தில்லி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு

DIN

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

மேலும் இதன்காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் பலியாகினர். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

கடந்த 15 நாள்களுக்கு மேலாக தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT