இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19.45 லட்சம் பரிசோதனைகள்

ANI

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,45,299 கரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 30 வரை 28,83,37,385 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 15,49,89,635 ஆகும். இந்தியாவில் தொடர்ந்து 105வது  நாளில் 27,44,485 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், கேரளம் தமிழ்நாடு, பிகார் ஆகிய 10 மாநிலங்களில் கரோனா பாதிப்பு 73.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் தற்போது மொத்தம் 32,68,710 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT