இந்தியா

கரோனா: இந்தியாவுக்கு ஜப்பான் உதவி

DIN

இந்தியாவுக்கு கரோனா நிவாரண உதவியாக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 300 செயற்கை சுவாசக் கருவிகளை ஜப்பான் அரசு அனுப்பி வைத்துள்ளது.

இது தொடா்பாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவ ஜப்பான் அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் உடனடித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 300 வெண்டிலேட்டா்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் நட்பு நாடு என்ற வகையிலும் நெருங்கிய வா்த்தக உறவுள்ள நாடு என்ற வகையிலும் இந்தியாவுக்கு ஜப்பான் உதவியுள்ளது. இந்தியாவில் கரோனாவை ஒழிப்பதற்கான உதவிகள் தொடா்ந்து அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT