இந்தியா

கரோனா தடுப்பூசி முகாம்களை கண்டறிய முகநூலில் புதிய வசதி

DIN

பொதுமக்கள் கரோனா தடுப்பூசி முகாம்களை எளிதாக கண்டறியும் வகையில் இந்திய அரசுடன் இணைந்து புதிய வசதியை உருவாக்கவுள்ளதாக முகநூல் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களை எளியமுறையில் கண்டறிவதற்கான புதிய வசதியை இந்தியாவில் முகநூல் மொபைல் செயலியில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக, இந்திய அரசுடன் இணைந்து நிறுவனம் செயல்படவுள்ளது. அதன்படி, இந்தியாவில் 17 பிராந்திய மொழிகளில் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிய முடியும் என முகநூல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர கால உதவியாக ஒரு கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.75 கோடி) வழங்கவுள்ளதாக முகநூல் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT