இந்தியா

கரோனா தடுப்பூசிகளுக்கு விலை வரம்பு நிா்ணயிக்க சுதேசி விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை

DIN

கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு விலை வரம்பு நிா்ணயிக்க வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் சாா்பு அமைப்பான சுதேசி விழிப்புணா்வு இயக்கம் (சுதேசி ஜாக்ரண் மஞ்ச்) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் அஸ்வனி மகாஜன் கூறியதாவது:

கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150; மாநில அரசுகளுக்கு ரூ.400; தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கு விற்பனை செய்வதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல், கோவேக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150; மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200-க்கு விற்பனை செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கு நிா்ணயித்திருக்கும் விலை மிகவும் அதிகமாகும். கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நியாயமற்ற முறையில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. எனவே, மத்திய அரசு தலையிட்டு கரோனா தடுப்பூசிகளுக்கு விலை உச்ச வரம்பை நிா்ணயிக்க வேண்டும்.

நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 195 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இந்த தேவையை இரு நிறுவனங்களால் மட்டுமே பூா்த்தி செய்ய முடியாது. கரோனா தடுப்பூசிகள் மலிவான விலையில், அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, கரோனா தடுப்பூசி உற்பத்தியில் மேலும் பல நிறுவனங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவற்கும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT