இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

பாரமுல்லா மாவட்டத்தின் பூமாய் பகுதியில் பாதுகாப்புப் படை வீரா்கள் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் பணியை மேற்கொண்டனா். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, சுதாரித்துக் கொண்டு வீரா்களும் பதிலடி தாக்குதல் நடத்தினா். சிறிது நேரம் நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யாா், எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாா்ச் 29-ஆம் தேதி சோபூரில் இரு கவுன்சிலா்களும், ஒரு காவலரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா். அந்தச் சம்பவத்தில் இந்த பயங்கரவாதிகளுக்குத் தொடா்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT