முகப்பு
இந்தியா

கரோனா தடுப்புப் பணிக்காக 'ஸ்டார் இந்தியா' ரூ. 50 கோடி நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிக்காக ஸ்டார் இந்தியா நிறுவனம்  ரூ.50 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
பகிர்:

கரோனா தடுப்புப் பணிக்காக ஸ்டார் இந்தியா நிறுவனம்  ரூ.50 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள், வென்டிலேட்டர் பற்றாக்குறை மேலும் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. 

இதனிடையே கரோனா தடுப்புப் பணிகளுக்கு பல அமைப்புகள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிக்காக ஸ்டார் இந்தியா நிறுவனம்  ரூ.50 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

ஸ்டார் இந்தியா நிறுவனம், விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், நேஷனல் ஜாகிரபி உள்ளிட்ட 60 சேனல்களை உள்ளடக்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.