முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 வீரர்கள் பலி, 5 பேர் காயம்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி பயங்கரவாத தாக்குதல்களில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 10 மே, 2021 at 12:32 PM
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 வீரர்கள் பலி, 5 பேர் காயம்
பகிர்:

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி பயங்கரவாத தாக்குதல்களில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாண தலைநகரான குவெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தாக்குதலில், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த துணைப்படை மற்றும் எல்லைப்புறப் படைகளைத் தீவிரவாதிகள் தாக்கினர். 

இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். டர்பட் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் ரோந்து செல்லும் முன்கள வீரர்களைப் பயங்கரவாதிகள் குறிவைத்துத் தாக்கினர். அவர்களில் 4 பேர் காயமடைந்தனர். 
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.