முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: குடியரசுத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம்

கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
பகிர்:

கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில் கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில், 'கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் கரோனா நிலவரம் என்ன என்பதை அந்தந்த தொகுதி உறுப்பினர்கள் தெரிவிப்பதன் மூலமாக பாதிக்கப்படும் மக்களுக்கு விரைந்து உதவ முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.