மகாராஷ்டிரத்தில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,236 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,236 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் தொடர்ந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினசரி கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 48,401 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அது மேலும் குறைந்து இன்று புதிதாக 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,38,973 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், மேலும் 61,607 பேர் நோய்த் தொற்றிலிருந்து ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 44,69,425 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 549 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 76,398 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,90,818 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.