கரோனா 3-ம் அலைக்குத் தயாராக வேண்டும்: தில்லி முதல்வர்
கரோனா 3-ம் அலைக்குத் தயாராக வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
கரோனா 3-ம் அலைக்குத் தயாராக வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
தில்லியில் ஜிடிபி மருத்துவமனை அருகேவுள்ள கரோனா சேவை மையத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கேஜரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
"3, 4 நாள்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசியை விநியோகிக்கக் கோரி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், மத்திய அரசே தடுப்பூசியை வழங்குகிறது என நினைக்கிறேன். ஒரு மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ள தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடமிருந்து எங்களுக்குக் கடிதம் கிடைத்துள்ளது. கூடுதல் தடுப்பூசிகளைத் தரக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கிறோம். 3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 28 ஆயிரத்தைத் தொட்டது. இந்த அளவின் அடிப்படையில் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். அடுத்த அலையில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தொட்டால்கூட எங்களால் எதிர்கொள்ள முடியும்" என்றார் கேஜரிவால்.