இந்தியா

2-18 வயதுடையவா்களுக்கு கோவேக்ஸின் செலுத்தி பரிசோதனை: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

DIN

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவா்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவா்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதனை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) விரிவாக பரிசீலித்து அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்குவதற்கு முன்பாக இரண்டாம் கட்ட பரிசோதனை குறித்த இடைக்கால தரவுகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு சிடிஎஸ்சிஓ நிபந்தனை விதித்துள்ளது’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT