இந்தியா

தடுப்பு மருந்து: ஹரியாணா, அசாம், ராஜஸ்தானில் அதிக அளவு வீண்

DIN

ஹரியாணா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலான கரோனா தடுப்பு மருந்துகள் வீணடிக்கப்பட்டிள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஒதுக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மாநில மருத்துவமனைகள் வீணடித்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பு மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மருந்தை தடுப்பூசி செலுத்தும்போது வீணாகிவிடுகிறது.

அதில் ஹரியாணா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ஹரியாணாவில் அதிகபட்சமாக 6.49 சதவிகிதமும், அசாமில் 5.92 சதவிகிதமும், ராஜஸ்தானில் 5.68 சதவிகிதமும் வீணடிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து இல்லாமல், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் அவதியடைந்து வருகிறது. இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி இல்லாமல் ஏராளமான மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கேரளத்தில் அரசு ஒதுக்கிய கரோனா தடுப்பு மருந்தை கவனத்துடன் கையாண்டு, மத்திய அரசு ஒதுக்கிய நபர்களை விட கூடுதலான நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT