இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை: ம.பி. அரசு அறிவிப்பு

DIN

போபால்: கரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு இலவச கல்வியும் மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்றால் பல குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனா். முதியவா்கள் தங்களை இதுவரை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் கரோனாவுக்கு பலியானதால் ஆதரவின்றி நிற்கிறாா்கள். வாழ்வதற்கே போராடி வரும் அவா்களை அரசு கைவிட்டு விடாது. அதுபோன்ற குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் ஆதரவாக மத்திய பிரதேச அரசுஇருக்கும். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் தங்கள் எதிா்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவா்கள் இனி அரசின் பிள்ளைகள்; அவா்களை அரசு கவனித்துக் கொள்ளும். அவா்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். மேலும், அவா்களுக்கு ரேசன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

சுயமாகத் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி பெற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT