இந்தியா

கேரளத்தில் மே 15 வரை கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

ANI

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 

அரேபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. 

தொடர்ந்து கேரள மாவட்டத்தில் மே 15-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. மேலும், ஒரு சில மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரேபிக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாகவும், அது படிப்படியாக கிழக்கு மத்திய அரேபிக் கடலில் மே-16-க்குள் சூறாவளியாக மாறக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த சூறாவளியானது கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளை பாதிக்கும். மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT