முகப்பு
இந்தியா

கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 

கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி கோயிலின் நடை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 
பகிர்:

கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி கோயிலின் நடை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டன. 

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு யாத்திரைத் தலங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நான்கு புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். 

அதன்படி இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 29 அன்று கரோனா தொற்று பரவல் பெருமளவில் அதிகரித்த நிலையில், உத்தரகண்ட் அரசு சார்தாம் யாத்திரையை இந்தாண்டு ரத்து செய்தது. 

முன்னதாக இந்த யாத்திரை மே 14ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. இதன்பின்னர், நான்கு கோயில்களின் அர்ச்சகர்கள் மட்டும் கோயில் சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் கூறினார்.

மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 5,775 புதிய பதிவாகியுள்ளன. அதேசமயம் 4,483 நோயிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.