முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 2.81 லட்சம் பேருக்கு கரோனா: 4,106 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 2,81,386 ஆகவும், இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,49,65,463 பேராகவும் உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,106 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,74,390 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 35,16,997  பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,78,741 குணமடைந்த நிலையில் இதுவரை  2,11,74,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 16 ஆம் தேதி வரை 31,64,23,658 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 15,73,515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேசமயம் இதுவரை 18,29,26,460 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.