இந்தியா

கரோனா தடுப்பு ஆலோசனைக் குழுத் தலைவா் ராஜிநாமா

DIN

மத்திய அரசின் கரோனா தடுப்பு ஆலோசனைக் குழுத் தலைவா் பொறுப்பில் இருந்து ஷாஹித் ஜமீல் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கடந்த டிசம்பா் மாதம் இந்திய சாா்ஸ் கரோனா தீநுண்மி மரபியல் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு கரோனா தீநுண்மியின் பல்வேறு வகைகளை கண்டறியவும், கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞானபூா்வ ஆலோசனைகளை வழங்கவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தீநுண்மி ஆராய்ச்சியாளா் ஷாஹித் ஜமீல் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் திடீரென ராஜிநாமா செய்துள்ளாா். அதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட்டதால் அவா் ராஜிநாமா செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT