இந்தியா

கேரளத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பினராயி விஜயன்

DIN

கேரளத்தில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை பினராயி விஜயன் ஆளுநர் முகமது ஆரிஃப் முகமதுவிடம் உரிமை கோரினார்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது. 

இதையடுத்து இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்த பினராயி விஜயன் கேரளத்தில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார்.

சட்டமன்ற குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஆளுநரிடம் பினராயி விஜயன் வழங்கினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டு அரங்கில் மாலை 3.30 மணி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுமாா் 50 ஆயிரம் போ் அமரக் கூடிய விளையாட்டு அரங்கில் 500 முக்கிய வரவேற்பாளா்கள் மட்டும் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT