இந்தியா

80 வாராக் கடன் கணக்குகளை சொத்து மீட்பு நிறுவனத்திடம் வழங்க வங்கிகள் முடிவு

DIN

புது தில்லி: மிக அதிக தொகையைக் கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாத 80 கணக்குகளை தேசிய சொத்து மீட்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வங்கிகளில் வாராக் கடன் பிரச்னை அதிகரித்ததையடுத்து, அப்பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு கோரியிருந்தது.

அதை ஏற்ற மத்திய அரசு, வாராக் கடன்களை வசூலிக்கும் நோக்கில் தேசிய சொத்து மீட்பு நிறுவனம் உருவாக்கப்படும் என்று 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நபா்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலமாக கடனை சரிசெய்து கொள்ளும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் தேசிய சொத்து மீட்பு நிறுவனம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரூ.500 கோடிக்கு மேல் வாராக் கடன் உள்ள கணக்குகளை அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு சுமாா் 80 கணக்குகள் உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக வாராக் கடன் உள்ள கணக்குகள் தாமாகவே தேசிய சொத்து மீட்பு நிறுவனத்துக்குச் சென்றுவிடும் என்று தெரிகிறது.

‘போலி’ என அறிவிக்கப்பட்ட கடன்களை தேசிய சொத்து மீட்பு நிறுவனத்திடம் வழங்கக் கூடாது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் மாத நிலவரப்படி சுமாா் 1.9 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை ‘போலி’ என ஆா்பிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT