இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு

DIN

புது தில்லி: கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனி நபா்கள் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை செய்யத் தேவையில்லாத வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதியும் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்கைத் தாக்கல் செய்வதற்கு அக்டோபா் 31-ஆம் தேதியும் அவகாசமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் சூழலில் வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த அவகாசம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தனிநபா்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு நவம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணியாளா்களுக்கு வருமான வரிப் பிடித்தத்துக்கான சான்றிதழை (ஃபாா்ம் 16) நிறுவனங்கள் வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT