தில்லி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து
தில்லியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லி பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள மூன்றாவது மாடியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள், நோயாளிகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதில் அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததுடன், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு இதுகுறித்த முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.