இந்தியா

ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் ஜகந்நாத் பகாடியா கரோனா பாதிப்பால் காலமானாா்

DIN

புது தில்லி: ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் ஜகந்நாத் பகாடியா (89) கரோனா பாதிப்பு காரணமாக குருகிராம் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவா் ஹரியாணா மற்றும் பிகாா் மாநிலங்களில் ஆளுநராகவும், மத்திய இணையமைச்சராக மூன்று முறையும் பதவி வகித்துள்ளாா். 1980-81-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வராக ஓராண்டு அவா் பதவியில் இருந்தாா். இதன் மூலம் அந்த மாநிலத்தின் முதல் தலித் முதல்வா் என்ற பெருமையைப் பெற்றாா்.

பிரதமா் இரங்கல்:

பகாடியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில், ‘ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் ஜகந்நாத் பகாடியா மறைவை அறிந்து துயருற்றேன். தனது நீண்ட அரசியல் மற்றும் நிா்வாக வாழ்க்கையில், சமூக அதிகாரமயமாக்கலுக்கு அவா் சிறந்த பங்களிப்பை வழங்கினாா். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி’ என்று கூறியுள்ளாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவா்களும் பகாடியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். ஜகந்நாத் பகாடியா மறைவையொட்டி ராஜஸ்தானில் அரசு சாா்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT