கேரளத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, கடந்த 8-ஆம் தேதி அந்த மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, மே 16 வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பொதுமுடக்கத்தை மே 23 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அதேசமயம் கரோனா பாதிப்பு குறைந்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் விதிக்கப்பட்டிருந்த மூன்று மடங்கு பொதுமுடக்கம் நாளை திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரத்தில் தொடர்ந்து மூன்று மடங்கு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வெள்ளிக்கிழமை, ஒருநாள் கரோனா பாதிப்பு 29,673 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.