முகப்பு
இந்தியா

சுந்தர்லால் பகுகுணா மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மறைவுக்கு குடியரசுத்  தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
சுந்தர்லால் பகுகுணா
பகிர்:

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மறைவுக்கு குடியரசுத்  தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா(94) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இன்று பிற்பகல் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அவரது மறைவுக்கு குடியரசுத்  தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீ சுந்தர்லால் பகுகுணாவின் மறைவு இயற்கை பாதுகாப்பில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது. 'பத்ம விபூஷன்' விருது பெற்றவர், காந்தியவாதி. அவர் இயற்கை பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல் என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி, ஸ்ரீ சுந்தர்லால் பகுகுணாவின் மறைவு நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. நாம் இயற்கையோடு இணக்கமாக வாழும் பல நூற்றாண்டுகளை அவர் நமக்குத் தந்தார். அவரது எளிமையும் இரக்க உணர்வும் ஒருபோதும் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →