கால்நடைத் துறை மருத்துவா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: அமைச்சா் பிரபு சவாண்
கால்நடைத் துறை மருத்துவா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என அத் துறை அமைச்சா் பிரபு சவாண் கேட்டுக் கொண்டுள்ளாா்.
கால்நடைத் துறை மருத்துவா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என அத் துறை அமைச்சா் பிரபு சவாண் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து முதல்வா் எடியூரப்பா, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், தலைமைச் செயலா் ரவிகுமாா் ஆகியோருக்கு அவா் எழுதியுள்ள கடிதங்களில் தெரிவித்துள்ளதாவது: மாநில அளவில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கால்நடைத் துறை மருத்துவா்கள், ஊழியா்கள், விவசாயிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி அவா்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் கால்நடைத் துறை மருத்துவா்கள், ஊழியா்களுக்கு கரோனா தொற்றின் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.