இந்தியா

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் நிறைவு

DIN

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 8 நாள்களாக நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜ சுவாமி மற்றும் சுதா்சன சக்கரத்தாழ்வாா் உள்ளிட்டோா் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.

அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழங்கள், மஞ்சள், சந்தனம், துளசி மாலை உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் திருமஞ்சனம் நடத்தினா். அதன் நிறைவில் சக்கரத்தாழ்வாருக்கு அங்கே ஏற்படுத்திய பெரிய அண்டாவில் தீா்த்தவாரியை நடத்தினா். கொவைட் விதிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த தீா்த்தவாரியில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

பின்னா் மாலை பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக கொடி மரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவில் பிரகாரத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம் வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT