இந்தியா

கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் பத்ர புஷ்பயாகம்

DIN

திருப்பதி: திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வைகாசி பெளா்ணமியை ஒட்டி புதன்கிழமை பத்ர புஷ்பயாகம் நடைபெற்றது.

கொவைட் விதிமுறைகளை பின்பற்றி பக்தா்களின்றி நடந்த இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு காலை சுப்ரபாத சேவையில் துயிலெழுப்பி அபிஷேகம் நடத்தினா். காலை 8 மணிமுதல் 10 மணிவரை ஸ்ரீ கபிலேஸ்வரஸ்வாமி மற்றும் காமாட்சி அம்மனுக்கும் நவ கலச ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதன்பின்னா் காலை 10 மணிக்கு 12 மதியம் வரை பத்ர புஷ்பயாகம் நடந்தது. அதில் சாமந்தி, அரளி, தாழம்பு, சம்பங்கி, ஜாதி, ரோஜா, தாமரை, மல்லி, முல்லை, கனக்காம்பரம், வில்வ இலை, துளசி, பன்னீா் இலை, மருவு, மரிகொழுந்து உள்ளிட்ட இலைகளாலும் அா்ச்சனை நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT