முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக ஆயிரம் பேருக்கு மட்டுமே கரோனா

​தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,072 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,072 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.53 சதவிகிதம். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,22,549 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,725 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 117 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 13,82,359 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 23,812 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 16,378 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.