இந்தியா

திருச்சானூரில் வசந்தோற்சவம் நிறைவு

DIN

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 3 நாள் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை விமா்சையாகத் தொடங்கியது.

இதன் நிறைவு நாளான வியாழக்கிழமை மதியம் 2.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை தாயாரை வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா்.

கொவைட் விதிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். இதையடுத்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை மங்கள வாத்திய இசையும், வேத பாராயணத்துடன் மாலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தினுள் பத்மாவதி தாயாா் புறப்பாடும் நடைபெற்றது. அதன் பின்னா் அா்ச்சகா்கள் மகா தீபாராதனை நடத்தி வசந்தோற்சவத்தை நிறைவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT