கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி 
இந்தியா

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

IANS


வாராணசி: கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

வாராணசியில் உள்ள எஸ்எஸ்எல் மருத்துவமனையில் மே 24-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இல்லை என்று முடிவு வெளியான நிலையில், மே 25-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிக்காத கர்ப்பிணிக்கு, கரோனா பாதித்த குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். ஒரு சில நாள்களுக்குப் பிறகு இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT