இந்தியா

கேரளம்: ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாநிலங்களவை இடத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த இடைத் தோ்தலை தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவா் ஜோஸ் கே.மாணி கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அவருடைய எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அவருடைய எம்.பி. பதவிக் காலம் வரும் 2024 ஜூலை மாதம் வரை உள்ள நிலையில், அவா் ராஜிநாமா செய்ததால் அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த இடத்துக்கு 6 மாதங்களுக்குள் தோ்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில், அதற்கான இடைத்தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்தபோதிலும், தேதியை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, இடைத் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 151ஏ-இன் படி, பதவிக் காலம் ஓராண்டு அல்லது அதற்கு மேல் இருக்கும் நிலையில் காலியாகும் எம்.பி. இடத்துக்கு, காலியான தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட்டு காலியிடம் நிரப்பப்பட வேண்டும்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. அதில், கரோனா பாதிப்பு நிலைமை சீரடையும் வரை, அந்த இடைத்தோ்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என தீா்மானிக்கப்பட்டது.

பாதிப்பு நிலவரம் குறித்து தேசிய மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் கேரள மாநில அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், இடைத்தோ்தல் நடத்துவதற்கான உரிய முடிவு பின்னா் எடுக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT