இந்தியா

ரூ.79,000 கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்து சாதனை

DIN

நடப்புச் சந்தை ஆண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் சாதனை அளவாக 400.45 லட்சம் டன் கோதுமையை ரூ.79,088 கோடிக்கு கொள்முதல் செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு ராபி சந்தைப் பருவத்தில் (2021-22) உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், குஜராத், ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீா் மாநிலங்களில் கோதுமை கொள்முதலானது குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் சுமுகமாக நடைபெறுகிறது. கடந்த 27-ஆம் தேதி வரை மொத்தம் 400.45 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 353.09 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

நடப்பு கொள்முதல் நடவடிக்கை மூலம் சுமாா் 42.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ.79,088 கோடி செலவானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT