சிஆா்பிஎஃப் தலைவருக்கு என்ஐஏ இயக்குநராக கூடுதல் பொறுப்பு
மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் குல்தீப் சிங்குக்கு கூடுதலாக தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) தலைமை இயக்குநா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் குல்தீப் சிங்குக்கு கூடுதலாக தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) தலைமை இயக்குநா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
என்ஐஏ தலைமை இயக்குநராக இருக்கும் ஒய்.சி.மோடி, மே மாதம் 31-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்பை சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் குல்தீப் சிங்குக்கு கூடுதலாகக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது தேசியப் புலனாய்வு அமைப்புக்கு புதிய இயக்குநா் நியமிக்கப்படும் வரை என்ஐஏ இயக்குநா் பதவியை குல்தீப் சிங் கூடுதலாகக் கவனித்துக் கொள்வாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான குல்தீப் சிங், கடந்த மாா்ச் மாதம் சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றாா்.