இந்தியா

இந்தியாவுக்கு கூடுதலாக மருத்துவ உபகரணங்களை அனுப்பும் பிரான்ஸ்

PTI

கரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவ 16 ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பிரான்ஸ் அனுப்புகிறது.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்று அந்நாட்டு அதிபா் இமானுவேல் மேக்ரான் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் நேற்று உரையாடிய நிலையில், பிரான்ஸ் தூதரகம் இந்த முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. அதில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரான்ஸிலிருந்து ஜூன் மத்தியில் 10 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களுடன் கார்கோ விமானம் இந்தியா வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மற்றொரு விமானமும் மருத்துவ உபரகணங்களுடன் வரவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT