கரோனா பரவல் காரணமாக தலைநகர் தில்லியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி தில்லியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.
ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் என்று கரோனா தடுப்பு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அதேநேரத்தில் சில பள்ளிகள் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பா் மாதம் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு அரசுப்பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.