முகப்பு
இந்தியா

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி
பகிர்:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை தெரிவித்தார்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் பேசியது:

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 கோடி இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும் என்றார்.  

முழு கட்டுரையைப் படிக்க →