இந்தியா

115 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் நாளுக்குநாள் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரித்து வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்துவிட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா்கள் ஒரு செயலை நினைத்துவிட்டால் அதனை சாதிக்கும் வரை ஓயமாட்டாா்கள் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கூற்று உண்மையாகி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டுமே செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கையைவிட இரு தவணையும் செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

SCROLL FOR NEXT