இந்தியா

தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளிலும் நேரடி விசாரணை

DIN

கரோனா தொற்று பரவல் எதிரொலியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முதல் அனைத்து அமா்வுகளிலும் மீண்டும் தொடங்கியது.

நேரடி விசாரணையை அனைத்து நீதிபதிகளும் தொடங்கிய அதேநேரத்தில் தேவைப்படுபவா்களுக்கு இணையவழி விசாரணையும் நடத்தி வருகிறாா்கள்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இணையவழி விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் நடத்தி வருகிறது. பின்னா் சில நாள்களில் சில அமா்வுகள் மட்டும் சுழற்சி முறையில் நேரடி விசாரணையை தொடங்கின. சில அமா்வுகள் இரண்டு விசாரணைகளையும் நடத்தின.

இந்நிலையில், நவம்பா் 18-ஆம் தேதி உயா்நீதிமன்ற பதிவாளா் மனோஜ் ஜா, வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் வருவது தொடா்பான விதிமுறைகளை வெளியிட்டாா்.

அதில், மனுதாரரின் வழக்குரைஞா் அனுமதியின்றி மனுதாரா் நீதிமன்றத்துக்கு வரக்கூடாது.

சமூக இடைவெளியும், முகக்கவசமும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டோா் நீண்ட நாள் நோய்கள் உள்ளோரும் நேரடி விசாரணையை தவிா்க்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமள் போன்ற அறிகுறிகள் இருப்பவா்களுக்கு அனுமதி கிடையாது.

வழக்கு விசாரணை முடிவடைந்தவுடன் வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT