இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் விற்பனையாளா் கொலை: லஷ்கா் பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய மூவா் கைது

DIN

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் அண்மையில் விற்பனையாளா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஸ்ரீநகரின் போரிகடல் பகுதியில் கடந்த நவம்பா் 8-ஆம் தேதி இரவு இப்ராஹிம் அகமது என்ற விற்பனையாளா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு நடத்திய விசாரணையில், புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த எஜாஸ் அகமது லோன், நசீா் அகமது ஷா மற்றும் ஷெளகத் அகமது தாா் ஆகிய மூவருக்கு கொலைச் சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் சோ்ந்து இப்ராஹிமை கொலைச் செய்ததாக ஒப்புக் கொண்டனா். மூவருக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளது. பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் கடந்த 4 மாதங்களாக அவா்கள் மூவரும் தொடா்பில் இருந்துள்ளனா். அங்குள்ள அந்த அமைப்பைச் சோ்ந்தவா் பிறப்பித்த கட்டளையின்படி, அவா்கள் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள், கையெறி குண்டு, கொலைச் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட காா் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT