ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு அற்புத வாய்ப்பளிக்கும் வாட்ஸ்ஆப் 
இந்தியா

ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு அற்புத வாய்ப்பளிக்கும் வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத இளசுகளே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் பலர் ஸ்டிக்கர் ஆர்மிகளாகவே இருக்கிறார்கள்.

IANS


புது தில்லி: வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத இளசுகளே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் பலர் ஸ்டிக்கர் ஆர்மிகளாகவே இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு வெப் அல்லது கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும்போது மிக அற்புதமான வாய்ப்பை அளிக்கவிருக்கிறது வாட்ஸ்ஆப் செயலியின் மெட்டா நிறுவனம்.

அந்த வகையில், வெப் அல்லது கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலரும் தாங்களது சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. 

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

அதற்கு, வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் சென்று, அங்கு அட்டாச் என்பதை கிளிக் செய்து, அதில் ஸ்டிக்கர் என்பதை தேர்ந்தெடுத்து, தேவையான புகைப்படத்தை பதிவேற்றி உங்களுக்கான ஸ்டிக்கரை உருவாக்கிக் கொள்ளலாம்.

அந்த புகைப்படத்தின் அளவை, பக்க வடிவை மாற்றி, எமோஜிகள் அல்லது வார்த்தைகளையும் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்கு, வெப் அல்லது கணினிக்கான புதிய வாட்ஸ்ஆப் செயலியை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT