கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் 
இந்தியா

கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல்: டிச.19-ல் வாக்குப்பதிவு

கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 19ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்பு மனு திரும்பப் பெற டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் இன்றுமுதல் கொல்கத்தா மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலும் அக்டோபர் மாதம் இடைத் தேர்தல்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT