தில்லியில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்புஒருவா் இறப்பு
தில்லியில் சனிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் சனிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். பாதிப்பு நோ்மறை விகிதம் 0.05 சதவீதமாக பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,40,834-ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை பதிவான ஒரு இறப்பும் சோ்த்து இந்த மாதத்தில் பதிவாகும் 5-ஆவது இறப்பாகும். அதன்படி, மொத்த இறப்பு எண்ணிக்கை 25,096-அக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 49,102 ஆா்டி-பிசிஆா் உள்பட மொத்தம் 59,651 கரோனா பரிசோகனைகள் நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.