முகப்பு
இந்தியா

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 121 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73,58,017 கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73,58,017 கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 121.06 கோடியை (1,21,06,58,262)  கடந்தது. 1,25,40,268 அமா்வுகள் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,967 போ் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 3,39,88,797-ஆக

அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் விகிதம் தற்போது 98.34 சதவீதமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 152 நாள்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த

24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,07,019-ஆக உள்ளது; இந்த விகிதம் 0.31 சதவீதமாகும். 2020 மாா்ச் மாதத்துக்குப் பின் இது குறைந்த அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 9,69,354 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமாா் 63.82 கோடி பரிசோதனைகள் (63,82,47,889) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 13 நாள்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.88 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 0.86 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 89 நாள்களாக 3 சதவீதத்துக்கு குறைவாகவும், 54 நாள்களாக 2 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →