இந்தியா

நாடு முழுவதும் என்ஆர்சி? மக்களவையில் அரசு விளக்கம்

நாடு முழுவதற்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

DIN


நாடு முழுவதற்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

என்ஆர்சி தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்ததாவது: 

"நாடு முழுவதற்கும் என்ஆர்சியைத் தயாரிப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை."

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 12, 2019 அன்று குறிப்பிடப்பட்டு ஜனவரி 10, 2020 முதல் நடைமுறையில் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வருபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT